Translate

Monday, 1 February 2016

ஊழல் மற்றும் லஞ்ச எச்சரிக்கை

லஞ்சமில்லா சமுதாயம்  !

வஞ்சமில்லா நெஞ்சம்  !!

வல்லரசாகும் பாரதம் !!! 

அனைவருக்கும் மிக மிக மிக மிகவும் நன்றி. குறுகிய காலத்தில் வலைத்தளத்தை பார்வையிட்டு கருத்துகளையும், ஆதரவையும் தெரிவித்த அனைத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு  ஒரு முறை நன்றி.
 நமது மக்களின் பெட்டிசன் இணையதளத்தில் முதல் மற்றும் முழு முயற்சியாக, 50 பைசாவிலிருந்து தன் திறமைக்கேற்றார் போல லஞ்சம் வங்கும் அதிகாரிகள் பற்றிய பட்டியலை வெளியிட உள்ளோம். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பொதுமக்களின் உதவியோடு கிடைக்கும் லஞ்ச அதிகாரிகள் பற்றிய விபரங்களை சம்பந்தபட்ட துறைகளுக்கு கொடுக்க உள்ளோம். தயவு செய்து லஞ்ச அதிகாரிகள் கவனமாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் இந்த நிமிடம் வாங்கும் கடைசி லஞ்சப் பணம் உங்கள் பதவி, பகட்டை பறிக்கும் ஒரு கருவியாக இருக்கலாம். இது அறிவிப்பு அல்ல... எச்சரிக்கை 

அரசு அதிகாரிகளின் லஞ்ச மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்த ஊழலுக்கு எதிராக களமிறங்கியுள்ளது நம் மக்களின் பெட்டிசன். 1,000 ரூபாய் மாட்டை 10,000ரூபாய்க்கு விற்பது, விற்பவனுக்கு  வியாபாரம்!    வாங்கியவனுக்கு ஏமாற்றம்!  இது வியாபார தந்திரம். இதனால் பாதிப்பு ஏற்படுவது... தனி மனித வியாபாரத்தால். போதிய வியாபார அனுபவம் இல்லாததால் தான். நமது நிலத்திற்கு பட்டா வாங்க... சாதிச் சான்றிதழ் பெற அவ்வளவு ஏன் டாஸ்மாக் கடையில் நமக்கு வேண்டிய சரக்கைப் பெற கூட்டிக் ஸாரி கூடக் கொடுத்தால் தான் நிம்மதியாக உள்ளே இறங்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

கண்டக்டர் 50 பைசா சில்லரை இல்லை என்பதும், ரேசன் கடையில் 5 ரூ சில்லரை இல்லை என்பதும், ஈ.பி ஆபிசில் 50 ரூபாய் இல்லை என்பதும், போக்குவரத்து துறை அலுவலகங்களில் கொடிநாள் வசூல் என்று (நாட்டின் துரோகிகள்) 500 ரூபாய் இல்லை என்பதும், பத்திரத்தில் வில்லங்கம் இருக்கு என்று சாதாராணமாக 5000 ரூபாய் இல்லையென்பதும், தர்மில்லாத கட்டிடம் என்று தெரிந்திருந்தும் அப்ரூவல் செய்ய சர்வசாதாரணமாக சின்ன வீட்டிற்கு 50,000ரூபாயில் இடுப்பு சங்கிலி வாங்கி மாட்டி அழகு பார்ப்பதும் நாம் மட்டுமல்ல மனிதனாக பிறந்த யாருமே எதற்காக இவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்று தெரியாமலே இருந்து விடுகிறோம். மாறாகக் கண்டு  கொள்வதுமில்லை. 

இது தான் லஞ்சம்.

    ஆனால் சவரம் செய்யும், சலவை செய்யும், செருப்பு தைக்கும், வீதி கூட்டி, கண்டதையும் தின்று 4 சுவற்றுக்குள் நாம் கழிப்பதை சுத்தம் செய்யும் ஏழை எளிய கூலித்தொழிலாளிக்கு என்றேனும் ஒரு நாளாவது நாம் லஞ்சம் கொடுத்ததுண்டா? ஸாரி... இனாம்... ஸாரி... ஊக்கத்தொகை கொடுத்ததுண்டா... இல்லை அவர்களாகவே எடுத்துக் கொண்டால் தான் சும்மா விட்டு விடுவோமா? அவர்கள் மீது திருட்டு பட்டம் சுமத்தி விடமாட்டோம் அல்லவா? மக்களின் பிச்சைக்காசில் (நேர்மையானவர்கள் மன்னிக்கவும்) பிழைப்பைத் துவக்கும் ஒரு அரசு ஊழியர், தன் கடமையை செய்ய பொது மக்களிடம் பிச்சை எடுக்கும் செய்கை தான் லஞ்சம் என்று நாம் சொல்லவில்லை இந்திய ஊழல் தடுப்புச் சட்டம், 1988  சொல்கிறது. நமது பாரதத் திருநாட்டில் லஞ்சம் ஊழல் அதிகாரிகளை ஒழிக்க, 


இந்திய ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அது...

1.   பொது ஊழியர் தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப் பூர்வமான வேலைக்கு சட்டப்படி பெற வேண்டிய ஊதியத்தை தவிர கைகூலி (நன்கொடை / அன்பளிப்பு) பெறுவது.
2.   பொது ஊழியம் செய்பவர் மறுபயன் இல்லாமல் விலை மதிப்புள்ள பொருட்களை தன்னுடைய அலுவல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஒருவரிடம் வாங்குவது.
லஞ்சம் வாங்குவது குற்றம்
என எடுத்துக் கொள்ள கீழ்க்கண்டவைகள்  தேவை...
1.கைக்கூலி (நன்கொடை / அன்பளிப்பு) பெறுபவர் பொது ஊழியராக இருத்தல் வேண்டும்.
2. கைக்கூலி (நன்கொடை / அன்பளிப்பு) பெறுபவரின் வேலை அதிகாரப் பூர்வமாக இருக்க வேண்டும்.
3.   கைக்கூலி (நன்கொடை / அன்பளிப்பு) பெறுபவர் பொது ஊழியராக இருந்து தான் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ சட்டத்திற்குப் புறம்பாக பணம் கோருதல் அல்லது பெறுதல்.
4.கைக்கூலி (நன்கொடை / அன்பளிப்பு)  பெறுபவராக இருப்பவர், பொது ஊழியரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகித்துப் பண மதிப்புள்ள அனுகூலம் பெறத்தகாத சலுகை அளித்தல்.
5.கைக்கூலி (நன்கொடை / அன்பளிப்பு) பெறுபவராக இருப்பவர், ஒரு குடிமகனிடமிருந்து பொது ஊழியர் அதிகாரப் பூர்வமான கடமையைச் செய்வதற்காக மறுபயனின்றி விலை மதிப்புள்ள பொருளைப் பெறுவதும் லஞ்சமே.
6.   கைக்கூலி (நன்கொடை / அன்பளிப்பு) பெறும், அந்த பொது ஊழியர் நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ லஞ்சம் பெற்றால் அவரும் அவருக்கு லஞ்சம் வழங்குபவர்களும் குற்றவாளிகள்.
7.   கைக்கூலி (நன்கொடை / அன்பளிப்பு) பெறும், பொது ஊழியர் தனது வருமான வழிவகைகளுக்குப் பொருந்தாத விதத்தில் சொத்துக்களைக் சேர்த்தலும் சட்டத்தின் படி குற்றம் என வரையறுக்கப் பட்டிருக்கிறது.

 

ஊழல் மற்றும் லஞ்சம்:

ஊழல் மற்றும் கைக்கூலி (நன்கொடை / அன்பளிப்பு) பெறுவதில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 107 நாடுகளில் வாழும் 1,14,270 பேர்களிடம் கருத்துக் கேட்டதில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக 70 சதவிகித இந்தியர்கள் கூறியுள்ளனர். ஊழல் மற்றும் கைகூலி (நன்கொடை / அன்பளிப்பு)யை ஒழிக்க சரியான முறையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 68 சதமும், இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல்படிந்தவை என்று 86 சதமும் தங்களின் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில், தங்களது காரியத்தைச் குறுக்கு வழியில் 27 சதவிகிதம் பேர் (கடந்த 12 மாதங்களில்) லஞ்சம் கொடுத்து சாதித்துள்ளனர். மேலும் ஊழலைப் போல லஞ்சம் பெறுவதிலும் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. நமது இந்தியாவில்  மட்டும் 54 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவின் காவல் துறையில் 62 சதவிகிதமும், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவிகிதமும், கல்வித்துறையில் 48 சதவிகிதமும், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவிகிதமும், நிதித்துறையில் 36 சதவிகிதமும் லஞ்சம் இருப்பதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது     .
ஊழல் மற்றும் கைக்கூலிக்கு தண்டனை..?
1. ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற் முன்பு     லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).
2. எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.
3. அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.
4. செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.
5. நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.
6. இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.
7. சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.
தண்டனை
ஆனால் நம் தாய் திருநாடான, இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.-வாகி, அமைச்சர் ஆவதுதான்தண்டனை.

 எப்படி புகார் செய்வது?

ஊழல் குறித்து புகார் செய்யும் போது புகார்தாரர் தனது பெயரையும், முகவரியையும் தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம். ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம்- பிரிவு 182 -இன் படி தண்டனைக்குரியது. பெயரில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஊழலில் சிக்கிய அதிகாரிகள் குறித்த தகவல்களை மத்திய விழிப்புணர்வு ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தனித்தொகுப்பாக வெளியிட்டு வருகிறது. http://cvc.nic.in என்ற இணைய தளத்தில் இது குறித்த முழுமையான விவரங்கள் உள்ளன.

கைக்கூலி (நன்கொடை / அன்பளிப்பு) க்கு தண்டனை:
            லஞ்ச ஊழலை சட்டத்தின்படி தவறு இழைத்த ஒரு நபருக்குத் குறைந்த பட்சம் ஆறு மாதம் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
கைக்கூலி (நன்கொடை / அன்பளிப்பு)  கட்டுப்படுத்த:
கைகூலியை (நன்கொடை / அன்பளிப்பு), ஊழலை ஒழிப்பதற்கே இந்திய அரசு மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது.  நடுவண் அரசுத் (மத்திய) துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை  மத்திய புலனாய்வு குழுவும் மாநில அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள். தமிழகத்தில் இந்த அமைப்பு இயக்குநர் சென்னை மல்லிகை மாளிகையில் செயப்பட்டு வருகிறது. சர்தார்வல்லபாய் பட்டேல்  பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் முதல் ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும்விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு (தான்) வருகிறது.

No comments:

Post a Comment