அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கழகத்தின் சென்னை கிளையின் சார் பில், லஞ்ச ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய விளம்பர 'ஸ்டிக்கர்' வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று லஞ்ச ஒழிப்பு கழகத்தின் அகில இந்திய தலைவர் ரவீந்திர திவேதி பேசியதாவது: எந்த வேலையாக இருந்தாலும் யாருக்கும் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க கூடாது. யாரும் வற்புறுத்தி லஞ்சம் கேட்டாலும் கொடுக்கக் கூடாது. லஞ்சம் கொடுத் தால் தான் உங்கள் கோரிக் கைகள் நிறைவேற்றப் படும், பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என்று அரசு அதிகாரிகள், பணியாளர்கள் கேட்டால் உடனடியாக லஞ்ச ஒழிப்பு கழகத்தை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்.
சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அரசுக்கும், சம்பந்தப் பட்ட துறையின் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்.
சென்னையில் 98401 12226, 93810 05734, மதுரையில் 93452 14242, கோவையில் 99408 51827, கிருஷ்ணகிரியில் 94430 53533 என்ற மொபைல் போன்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். |
No comments:
Post a Comment