உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.
Translate
Friday, 17 May 2013
பொறாமை
“எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருத்துவம் கண்டேனா?”
என்று கவிஞர் கண்ணதாசன் சொல்ல மறந்த கொடிய நோய் என்ன தெரியுமா? பொறாமை!
என்று கவிஞர் கண்ணதாசன் சொல்ல மறந்த கொடிய நோய் என்ன தெரியுமா? பொறாமை!
Tuesday, 14 May 2013
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்?
ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு மனிதர் எவ்வாறு உணர்கிறார், சிந்திக்கிறார், அதுதொடர்பாக அவரது நடத்தைகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே, ஒரு தனிமனிதனின் குணநலன் தீர்மானிக்கப்படுகிறது. இந்த உலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கையில், அவர்களில் ஏன் வெகு சிலர் மட்டுமே வெற்றியடைகிறார்கள்? என்ற கேள்விக்கு மிக எளிதான் விடையை அளிக்கலாம். வெற்றியடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டுள்ளனர்.
மனதில் இருக்கும் சக்தியை பயன்படுத்துங்கள்
மின் உற்பத்தி நிலையத்தில் தொடரந்து மின்சக்தி உற்பத்தியாகி வருதைப்
போன்று,மனதில் ஆக்கச் சக்தி உற்பத்தியாகி வருகிறது. கிணற்றிலிருந்து
தண்ணீர் இறைக்க இறைக்க ஊற்றுநீர் சுரந்து நீர் மட்டம் பழைய அளவுக்கு
வந்துவிடுதைப் போன்று,நாம் செலவு செய்யும் சக்தி சமமாக உங்களுடைய மனதில்
புதிய சக்தி உருவாகிவிடுகிறது.
Saturday, 27 April 2013
வாழ்க வளமுடன்
அருட்காப்பு
”அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும்
பாதுகாப்பாகவும்,வழி நடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வளமுடன்!”
அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன்!
வேதாத்திரி மகரிஷி யின் தியானம்
வேதாத்திரி மகரிஷி யின் தியானம் videos
http://vethathri.blogspot.in/
Wednesday, 24 April 2013
வேண்டாத எண்ணங்களை எப்படி ஜெயிப்பது ?
ஒரு சிஷ்யன் பரமஹம்ஸரிடம் வந்து கெட்ட நினைவுகளை
எப்படி ஜெயிப்பது என்று கேட்டான்.
தான ஜபதபங்கள் செய்து வந்த போதிலும் தன் மனத்தில்
அடிக்கடி கெட்ட நினைவுகள் உண்டாவதாகத் தெரிவித்தான்.
அதற்குப் பகவான், பதில் சொன்னதாவது : -
எப்படி ஜெயிப்பது என்று கேட்டான்.
தான ஜபதபங்கள் செய்து வந்த போதிலும் தன் மனத்தில்
அடிக்கடி கெட்ட நினைவுகள் உண்டாவதாகத் தெரிவித்தான்.
அதற்குப் பகவான், பதில் சொன்னதாவது : -
மனம்
மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது. ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம்தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது. இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.
Tuesday, 23 April 2013
விவேகானந்தர் பொன்மொழிகள்
- நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
Monday, 22 April 2013
செவி வழி தொடு சிகிச்சை
செவி வழி தொடு சிகிச்சை என்றால் என்ன?
நாம் அனைவரின் உடலிலும் ஒரு சுரப்பி இருக்கிறது. அது
சுரக்கும் ஒரு திரவம் மனிதனின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். இந்த
திரவம் 120 வயது வரை சுரக்கும்.
அந்த சுரப்பியின் பெயர் என்ன? உடலில் எங்கே உள்ளது?
அது சுரக்கும் திரவத்தின் பெயர் என்ன? அதை எப்படி நமக்கு நாமே சுலபமாக
சுரக்க வைப்பது என்பதை படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும்
தெரியும்படி பல மொழிகளில் விளக்கமாக நான்கு மணி நேரத்தில் புரிய வைத்து
கற்றுகொடுக்கிறார் Healer பாஸ்கர்.
48 மணி நேரத்தில் இந்த சுரப்பியை சுரக்க வைக்க முடியும். அனைத்து நோய்களும் 120 நாள் முதல் 360 நாளுக்குள் முற்றிலும் குணமாகும்.
இந்த சிகிச்சையில் எந்த மருந்து, மாத்திரை,
ஊசி, தியானம், யோகா, மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி, அக்குபஞ்சர்,ரெய்க்கி,
நாடிபார்த்தல், பத்தியம் கிடையாது.
Saturday, 20 April 2013
Tuesday, 9 April 2013
Subscribe to:
Posts (Atom)