Translate

Saturday, 15 February 2014

நம் திறமையை வளர்ப்பது எப்படி?

   நாம் ஒரு பெரிய சாதனையை செய்ய முற்படும்போது திறமை, தகுதி, உழைப்பு அனைத்தும் சரியாக இருந்தும்கூட வெற்றியை நழுவ விடுகிறோம். இது நம் விதி, சூழ்நிலை சரியில்லை என்றெல்லாம் காரணம் காட்டி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் நாம் புற விஷயங்களில் வெற்றிக்கு தகுதி உடையவராய் ஆனதைப்போல், மனதளவில் வெற்றிக்கு தகுதி உடையவராய் ஆகாததே நம் தோல்விக்கு காரணம் என்பதை நாம் உணர்வதில்லை.


நம் மனதை வெற்றிக்கு தகுதி உடையதாய் ஆக்குவது எப்படி என்பதை இன்று ஒரு தகவல் பகுதி மூலம் அறிந்து கொள்வோம்.


வெளிமனம்-உள்மனம்


நம் எல்லோருக்கும் மனதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.

1. வெளிமனம் நினைவு மனம் - புறமனம். ,

2. உள்மனம் ஆழ் மனம், சப் கான்ஷியஸ் மைண்ட். நாம் வெளிமனதின் மூலமாகவே இப்போது நினைப்பதையும் பேசு வதையும் செய்கிறோம்.


உள்மனம் என்பது நாம் பிறந்தது முதல் இந்தக்கணம் வரை நம் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களின் பதிவுகளையும் அடக்கியது. உள்மனதின் சக்தி அபாரமானது. உதாரணமாக கடலில் மிதக்கும் பணிப்பாறை சிறிது மட்டும் வெளியே தெரியும். அது வெளிமனம். ஒரு மலையளவு பனிப்பாறை கடலுக்குள் மூழ்கியே இருக்கும் அது உள்மனம்.

உள் மனதின் சக்தியைப்பெற்றவர்கள் பல சாதனைகளை செய்யலாம். ஆனால் வெளி மனம் நாம் எளிதில் உள்மனதோடு தொடர்பு கொள்ள முடியாதபடி தடுத்துவிடுகிறது. அப்போதும் கூட

1. மிக மிக ஆழ்ந்து சிந்திக்கும் போது,

2. மிக ஆழ்ந்து ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும்போது,

3. தியா னத்தின்போது,

4. தூக்கம் கண்களைச் சுற்றி ஒரு அரைத்தூக்க நிலையில் இருக்கும்போது

5. காலையில் படுக்கையில் விழிப்பு வந்ததும் வராதிருக்கும் அரை விழிப்பு நிலை யில் நாம் உள்மனதோடு தொடர்புகொள்ள முடியும்.


சரி, ஒரு மனிதனின் வெற்றிக்கும் தோல் விக்கும் உள்மனம் காரணமாவதை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம். ஓர் இளைஞன் சிறந்த பேச்சாளராக ஆகவேண்டும் என்று ஆசைப் படுகிறான். அதாவது அவனுடைய வெளிமனம் ஆசைப்படுகிறது. அருமையான கருத்துக்களை திரட்டி, நன்றாக பேசுவதற்கு பயிற்சி எடுத்து கொள்கிறான். பேச்சுக்கலையில் தோல்வியடைகிறான். இது எதனால்? அவனுடைய உள் மன தின் அவநம்பிக்கையால் உள்மனம் என்ன நினைக்கிறது என்பதை நம்மால்-அதாவது நம்முடைய வெளிமனதால் உணர முடியாது. .

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உள் மனதில் அவனைப்பற்றி ஓர் உருவகம் - ஓர் இமேஜ் படிந்திருக்கும். அதற்கு ஏற்ப அவன் நடவடிக்கை கள் அமைகின்றன. இந்த இமேஜ் ஒவ்வொருவருக் கும் அவரவர் சிறுவயதில் 14 வயதுக்குள் அமைந்துவிடுகிறது. நான் இதுவரை மேடையில் பேசியதில்லை. எனக்கு அவ்வளவாக பேச்சு வராது. எனவே நான் சிறந்த பேச்சாளராக முடியாது என்று அந்த இளைஞனின் உள்மனதில் அவனைப்பற்றிய இமேஜ் படிந்திருக்கும். அதன் விளைவாகவே அவன் மேடைப்பேச்சில் தோல்வியடைகிறான்.

சரி. அது உண்மைதானா? உண்மையிலேயே அந்த இளைஞனுக்கு பேச்சாளராக தகுதி இல்லையா? அப்படியல்ல. நிச்சயம் அவனுக்கு தகுதி இருக்கிறது. தகுதி இருப்பதால்தான் ஆசை வருகிறது. சிறு வயதில், பெரியவர்கள் நம்மிடம் அதைச் செய்யாதே. இதைச்செய்யாதே என்று எதிர்மறையாக கூறி, கூறி நமது திறமைகளைப் பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மையை நமக்குள் உருவாக்கிவிடுகிறார்கள். ஆகவே அவனுடைய உள் மனதின் இமேஜில் பேச்சாளராக முடியாது என்ற கருத்தே படிந்திருக்கிறது.
கற்பனை செய்க

அவன் தன் உள்மனதை தான் சிறந்த பேச்சாளர்தான் என்று நம்பவைத்தால் அவன் நிச்சயம் வெற்றிபெற்றுவிடுவான். இதை எப்படி செய்வது?
அவன் தன் பேச்சுத்திறமையை நிரூபிக்கும் வகையில் நடந்த சம்பவங்களை அடிக்கடி நினைத்துப்பார்க்க வேண்டும். அவன் பேச்சை கேட்டவர்கள் யாராவது பாராட்டியது, அவன் சிறுவயதில் ஏதாவது பேச்சுப்போட்டியில் பரிசு வாங்கியது போன்ற சம்பவங்கள். அவன் சிறந்த பேச்சாளராகிவிட்டதைப்போலவும் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் மேடையில் பேசி கைதட்டல் வாங்குவதைப்போலவும் மனதில் மனப்படங்களை கற்பனை செய்து, அவற்றை உணர்ந்து அனுபவித்து பார்க்கவேண்டும். இவை ஆழ்மனப்பதிவுகளாக உள் மனதில் பதிவாகின்றன.

வெளிமனம் மூலம் பேச்சாளர் ஆவதற்கு படித்தல், பேச்சுப்பயிற்சி போன்றவற்றை கையாண்டு வரும் அதே நேரத்தில், தன் உள் மனதையும் தயார்படுத்திக்கொண்டு வந்தால் அந்த இளைஞன் நிச்சயம் வெற்றிபெற முடியும்.

நீங்கள் எந்தத் துறையில் சாதனை படைக்க விரும்புகிறீர்களோ அந்தத்துறையில் சாதனை செய்து வெற்றி பெற்று விட்டதாகவே கனவு கண்டு அதை ஆழ்மனதில் பதியவையுங்கள். உதாரணமாக பேச்சாளர் ஆக விரும்புபவர்கள், நான் ஒரு சிறந்த பேச்சாளன் என்றால் மிக அற்புதமாக மேடையில் பேச முடியும் என்பது போன்ற நேர்மறை- பாசிடிவ்-எண்ணங்களை ஆழ்மனதில் பதிய வைக்கவேண்டும். இதை சுய கட்டளை - ஆட்டே சஜஷன் என்பார்கள் அதற்கான வழிமுறை.

வெற்றி பாதையில் செல்ல...

1. இரவு தூங்கச்செல்லும் முன் கண்களை மூடி படுத்துக்கொண்டே உடல் முழுவதும் தளர்வாக இருக்கச்செய்க. 1 முதல் 10 வரை எண்ணுக. இப்போது சுயமனோவசியம் செய்யப் பட்ட நிலை. இப்போது உங்கள் நம்பிக்கை மிகுந்த எண்ணங்களை திரும்பத்திரும்ப கூறுங்கள்.

2. உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட அரை விழிப்பு நிலையில் - பாசிட்டிவ் எண்ணங்களை ஆழ்மனதில் விதையுங்கள்.


ஒரு முக்கியமான விஷயம்

1. நீங்கள் கூறும் வாக்கியம் பாசிட்டிவாக இருக்கவேண்டும். நெகடிவாக இருக்கக்கூடாது. உ.ம். நான் மேடையில் உளறமாட்டேன் என்று கூறக் கூடாது.

2. நிகழ்காலத்தில் வாக்கியத்தை அமையுங்கள். உ.ம். மேடையில் அற்புதமாக பேசும் சக்தி எனக்கு இருக்கிறது.


இதுபோன்று உங்கள் உள்மனதை தயார் செய்துவிட்டால் அது உங்களுக்கு வேண்டிய ஆற்றலை அள்ளித்தரும். நீங்கள் நடக்க வேண்டிய வெற்றிப்பாதையில் உங்கள் உள்மனமே உங்களை வழி நடத்திச்செல்லும்.

வெற்றி உங்களுக்கே

5 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : முனைவர். இரா. குணசீலன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : வேர்களைத்தேடி........

    வலைச்சர தள இணைப்பு : உன்னையறிந்தால்...

    ReplyDelete
  2. சிறப்பான ஆக்கம் ..பாராட்டுக்கள்..
    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பெறுமதியான ஆக்கம் .... நன்றி

    ReplyDelete
  5. அற்புதமான கட்டுரை

    ReplyDelete